2016-ம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா என்ற புதிய காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாகவே `பயீர் இன்ஷூரன்ஸ்’ தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டன.
தனியார் நிறுவனங்கள் நேர்மையாக விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை கொடுக்கும் என்பதற்கு எந்தவோர் உத்தரவாதமும் இல்லை. லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படக்கூடிய தனியார் நிறுவனங்கள், கண்டிப்பாக விவசாயிகள் நலனைப் பற்றி கவலைப்படப் போவதில்லை.
இன்று வரை பல விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை கிடைக்கவே இல்லை. தற்பொழுது ஒரு சிலருக்கு மட்டும் அதிர்ஷ்டவசமாக இழப்பீட்டு தொகை வந்து சேர்ந்தது. இதனை கண்டு ஆனந்தப்பட வேண்டிய விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். காரணம் வெறும் 2 ரூபாய், 8 ரூபாய் என ஒற்றை இலக்கத்தில் காசோலை வந்துள்ளன. இது தங்களை அவமானப்படுத்துவது போல் உள்ளது எனக் கொந்தளிக்கிறார்கள் விவசாயிகள்.
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்ற பழமொழி தனியார் பயிர் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் தோற்றுவிட்டன.
தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணித்து, விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவது மத்திய மாநில அரசுகளின் கடமை.
ஆனால், இதெல்லாம் இங்கு நடக்காத காரியம் என்பது நாடறிந்த யதார்த்தம்.
No comments:
Post a Comment